×

ஏன் டா படுபாவி!  ஜெயிலுக்கு போயும் நீ  திருத்த மாட்டியா? ராதிகா ஆவேசம்

 

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு சர்ச்சை பேசினால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு பிறகு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் . ஆளுநர் ரவி,  பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இந்த சூழலில் சமீபத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சரத்குமாரை விமர்சனம் செய்து பேசியிருந்தார்.  இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத்குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார்.  அதை கொச்சையாக விமர்சனம் செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான சில வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.