×

தரையில் குவித்து வைத்திருந்த பானி பூரி! “இதுலாம் என்னதுங்க ?” அதிகாரிகள் விட்ட ரெய்டு

 

கோவையில் பானி பூரி கடைகள் மற்றும் தயாரிப்புக் கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நகரில் பல்வேறு பகுதிகளில் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் ₹30,000 மதிப்பிலான பானி பூரிகள் அழிக்கப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு ₹12,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு, ஃபாஸ்ட் புட் ஸ்டால்களில் நடக்கும் தரமற்ற உணவு விநியோகம் மற்றும் தயாரிப்பை தடுக்க அதிரடியாக ரெயிடில் ஈடுபட்டனர். பாணி பூரி விற்கும் இடங்கள் மட்டுமின்றி, தயாரிக்கும் இடங்களுக்கும் சென்று, தயாரிப்பு கூடங்குளின் தரம், தயாரிப்பு முறை, பொருட்கள் கையாளுதல் உள்ளிட்டவை குறித்து ரைடில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 30,000 மதிப்பிலான பானிப்பூரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையிலே செல்வபுரம் பகுதியில் நடந்த அதிரடி ரைடில் பாணி பூரி குவியலை பறிமுதல் செய்து அழித்தனர். பானி பூரி தரையில் கொட்டிக் கிடந்த நிலையிலெ, அதனை பார்த்து இதுபோன்று எங்கும் பார்த்ததில்லை என கடிந்து கொண்ட அதிகாரி தமிழ்ச்செல்வன், உடனடியாக அனைத்தையும் பறிமுதல் செய்து , ஃபினாயில் ஊற்றி அழித்தார். தரமற்ற எண்ணைகளை பயன்படுத்துவது, கசடு வந்த பிறகும் எண்ணெயை பயன்படுத்துவது உள்ளிட்டவைகளை கண்டித்த அவர், இதுபோன்ற நிலையை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பானி பூரி அதற்கான ரசம் மசாலா உள்ளிட்டவைகளை உட்கொள்ளும் பொழுது குடல் சார்ந்த உடல் உபாதைகள் ஏற்படும் என தெரிவித்த அவர், பொதுமக்கள் இது போன்ற உணவு பழக்கத்திலிருந்து விடுபட அறிவுறுத்தினார். 

பானி பூரி, பானி பூசி ரசம், உள்ளிட்டு மசாலா உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஃபாஸ்ட் ஃபுட் உள்ளிட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என, மருத்துவர்கள் ஒருவரும் அறிவுறுத்தி வரும் நிலையில், அடிப்படையில் மருத்துவரான உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் அவர்களும் வலியுறுத்தினார்.