×

வெள்ளத்தால் மிதக்கும் மதுரை மாட்டுத்தாவணி!

 

மதுரையில் பெய்த கனமழை  காரணமாக சாத்தையார் ஓடை நிரம்பி வெளியேறியதில் 2வது நாளாக  குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  

மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் எதிரேயுள்ள டிஎம் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாத்தையாறு அணை ஓடையில் இருந்து வண்டியூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்லக்கூடிய பகுதியில் முழுவதும் வெள்ள நீர் நீரம்பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. 

இதனால் நேற்று முன்தினம் இரவு முதலாக குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். டிஎம் நகர் பகுதியில் உள்ள மருத்துவ குடோன்களில் இருந்து மருந்துகளை வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்குள்ள பணியாளர்கள் நீண்ட தூரம் மருந்துகளை தோளில் சுமந்து சென்றுவருகின்றனர்.