×

தமிழகத்தில் மதியம் 1 ஒரு மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் மதியம் 1 ஒரு மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புயல் 30ம் தேதி கரையை கடக்கும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாளை காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும்  எனவும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு 480 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மதியம் 1 ஒரு மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.