×

அதிகாலை முதலே சென்னையில் மழை!

 

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அதிகாலை முதலே சென்னையில் மழை பெய்து வருகிறது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை முதல் 28ஆம் தேதி  வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.இந்நிலையில் சென்னையில் அடையாறு, கிண்டி , மயிலாப்பூர் , ஈக்காட்டு தாங்கல், திநகர் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.