×

சென்னையை குளுகுளுவாக்கிய  திடீர் மழை.. !!

 

 கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கத்தினால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக  வட உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால்  வெப்பமானது சுட்டெரித்து மக்களை வாட்டி வதைக்கிறது . இந்த சூழலில் நள்ளிரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் குளிர் காற்றுடன் லேசான மழை பெய்தது.

 

சென்னை சென்ட்ரல் ,எழும்பூர் ,கிண்டி, ,புரசைவாக்கம் நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர், மீனம்பாக்கம் ,குரோம்பேட்டை ,பல்லாவரம், அசோக் நகர், அடையாறு ,மயிலாப்பூர், வடபழனி ,தாம்பரம் ,வண்ணாரப்பேட்டை ,ஆயிரம் விளக்கு ,நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது .இதனால் சென்னையில் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.