×

தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரஜினி..   

 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை வெளியிட்ட  அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்த விஜய்,  வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு எனக்கூறி, அதற்காக  கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  அந்தன் ஒரு பகுதியாக கடந்த 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின்  அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் அக்கட்சித் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.  பனையூரில் உள்ள  தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, விரைவில் மாநாடு நடைபெறும் எனவும், கட்சின் கொள்கை, செயல்பாடுகள், கொடிக்கான விளக்கம் ஆகியவை அன்றைய தினம் சொல்லப்படும் என்றும் கூறியிருக்கிறார்.  


 
அரசியல் களத்தில் விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் கவனம் பெற்று வரும் அதேவேளையில் பல சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. இதனிடையே கட்சிக்கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய்க்கு , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் விஜய்யின் கட்சிக் கொடி மற்றும் பாடல் வெளியீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார்.  

முன்னதாக அவரிடம் சினிமாவில் மூத்த நடிகர்கள் இருப்பதால, இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அமைச்சர் துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர்.. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. அவருடனான நட்பு எப்போதும் தொடரும்” என்று தெரிவித்தார்.