×

 ‘இந்தியாவின் உண்மையான மகன் இனி இல்லை’ -  ரஜினிகாந்த் உருக்கம்.. 

 

‘இந்தியாவின் உண்மையான மகன் இனி இல்லை; நிம்மதியாக ஓய்வெடுங்கள்’ என  தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த்  இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இந்தியாவின் பிரபலமான மற்றும் இந்தியத் தொழில்துறையில் தவிர்க்க முடியாத முக்கிய தொழிலதிபரா ரத்தன் டாடா,  நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஒரு கேம்ஜேஞ்சராக விளங்கிய ரத்தன் டாடா, மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி,  அனைத்து மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், தொழில் துறையினர், பிரபலங்கள் என ஒட்டுமொத்த இந்தியாவும்  இரங்கல் தெரிவித்து வருகின்றது.  ரத்தன் டாடாவின் மறைவையொட்டி மகாராஷ்டிராவில் இன்று ( அக்.10) ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 

அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ள நிலையில்,  அவரது உடல் மும்பை நரிமன் பகுதியிலுள்ள தேசிய கலை மையத்தில்  (NCPA)பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி வரை அவரது உடல் அங்கு வைக்கப்படும் நிலையில் , பின்னர் வோர்லி மையானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லபடுகிறது.  அங்கு அரசு சார்பில் ரத்தன் டாடாவி  உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.  

இந்நிலையில் ரத்தன் டாடாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தனது தொலைநோக்குப் பார்வையாலும்,  ஆர்வத்தாலும் இந்தியாவை உலக வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்த  ஒரு சிறந்த பழம்பெரும் அடையாளம். ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்கப்படுத்தியவர்..  பல தலைமுறைகளுக்கு  லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர். அனைவராலும் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்ட மனிதர்..

அவருக்கு எனது ஆழ்ந்த வணக்கங்கள். இந்த சிறந்த மனிதருடன் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் நான் என்றென்றும் போற்றுவேன்.. இந்தியாவின் உண்மையான மகன் இனி இல்லை. .. நிம்மதியாக ஓய்வெடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

null