"சூழ்நிலைக் கைதியாக அரசியலுக்கு வந்தார்"- ஜானகி ராமச்சந்திரன் குறித்து ரஜினி உருக்கம்
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவுக்கு நடிகர் ரஜினாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா நடைபெற்றுவருகிறது. விழாவில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தொடர்ந்து ஜானகி ராமச்சந்திரன் புகைப்படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நடிகைகள் வெண்ணீராடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், ஜானகி ராமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்து பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில், “கடைசி வரை எம்ஜிஆருக்கு உறுதுணையாக இருந்தவர் ஜானகி. கட்சி நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி ஜானகி ராமச்சந்திரன். எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மையார் அரசியலுக்கு வந்தது Political accident. சூழ்நிலைக் கைதியாக அரசியலுக்கு வந்தார். அவருக்கு ஈடுபாடு இல்லை. இரட்டை இலை என்ற பிரம்மாஸ்திரம் முடக்கப்பட்ட போது அதனை மீட்டெடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு விட்டுக்கொடுத்தவர் ஜானகி அம்மா. ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தது அவரின் பக்குவத்தை உணர்த்தியது.. ஜானகி அம்மையாருக்கு எடப்பாடி பழனிசாமி இந்த நூற்றாண்டை நடத்துவது சிறப்பு” எனக் கூறியுள்ளார்.