‘வாழை’ ரொம்ப நாளைக்கு அப்புறம் தரமான படம்... மாரி செல்வராஜ்க்கு ரஜினி பாராட்டு
Sep 2, 2024, 19:19 IST
'வாழை' திரைப்படம் பார்த்த பின் இயக்குநர் மாரி செல்வராஜை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்ட்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.