×

டாக்டர் பத்ரிநாத் மறைவு - ராமதாஸ் இரங்கல்

 

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும், தலைசிறந்த கண் மருத்துவருமான எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும்,  தலைசிறந்த கண் மருத்துவருமான எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து  மிகுந்த வருத்தமடைந்தேன்.மருத்துவமனை நடத்துவதை  மருத்துவர் பத்ரிநாத் அவர்கள் ஒரு போதும் தொழிலாக பார்த்ததில்லை... சேவையாகவே செய்தார்.  ஏழை மக்களுக்கும் தரமான மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதை செயல்படுத்தியும் காட்டினார். அவரது மறைவு மருத்துவத் துறைக்கு பெரும் இழப்பு.