×

சமூகநீதி போராளிகள் மணி மண்டப திறப்புவிழாவிற்கு ராமதாஸுக்கு அழைப்பு: பொன்முடி!

 

விழுப்புரத்தில் வரும் 29ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் , 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவுக்கு தமிழக அரசு சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சமூகநீதி போராளிகள் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும், என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தையும், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கத்தையும்,வரும் 29-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார். மேலும் அனறைய தினம், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, இன்று (நவ.23) விழுப்புரம் தெற்கு திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் பொன்முடி, “வரும், நவ.29ம் தேதி, விழுப்புரத்தில் நடைபெறும் , ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழக அரசு சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸ், மற்றும் 21 சமூகநீதி போராளிகள் குடும்பத்துக்கு அழைப்பு விடுக்கப்படும்” என்றார்.