×

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - வெளியானது அறிவிப்பு

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ராமநாதபுரத்தில் கனமழை பெய்து வருகிறது. மேகவெடிப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் 41 சென்டி மீட்டர்  அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. பாம்பனில் 19 சென்டி மீட்டர் மழை பொழிவால் வெள்ளக்காடாக மாறியது. ராமநாதபுரம் பேருந்து நிலையம் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளித்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். 

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் அந்தந்த பகுதிகளில் நிலவும் நிலைமைக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை குறித்து முடிவெடுக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்துள்ளார்.