ரம்ஜான் பண்டிகை : தமிழக பள்ளித் தேர்வு அட்டவணையில் மாற்றம்..!
Mar 28, 2024, 23:06 IST
தமிழகத்தில் ரம்ஜான்(ஏப்ரல்10) பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 4 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.