×

ரஞ்சி டிராபி - இன்று தமிழகம், கர்நாடகா மோதல் - இலவச அனுமதி

 

ரஞ்சி டிராபி கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் இன்று மோதுகின்றன. சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 89வது ரஞ்சி தொடரில் சி பிரிவில் உள்ள தமிழ்நாடு அணி 6ஆவது லீக் ஆட்டத்தில் கர்நாடகாவை எதிர்கொள்கிறது.

சேப்பாக்கத்தில் இன்று தொடங்கும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியைக் காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் பிப்.12 வரை ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது; நுழைவாயில் 4, விக்டோரியா ஹாஸ்டல் சாலை, சேப்பாக்கம் வழியாக பார்வையாளர்களுக்கு அனுமதி தரப்படும்.