×

“நீயெல்லாம் என்ன தலைவர்?”- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.பி. உதயகுமார் பேச்சு

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.பி. உதயகுமார் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அதிமுகவிற்கு மக்கள் அதிகாரம் வழங்கினால் மக்கள் வளர்ச்சி அடைவார்கள். திமுகவிற்கு மக்கள் அதிகாரம் வழங்கினால் திமுகவின் பிள்ளைகள்தான் வளர்ச்சி அடையாவர்கள். அரசியல் கத்துக்குட்டி உதயநிதிக்கு ஒரு வரலாறு தெரியாது! இவர் எடப்பாடி பற்றி பேச வந்துட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா வெற்றிப்பெற்ற ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற முடியவில்லை என்றால் நீயெல்லாம் என்ன தலைவர்? அம்மா, புரட்சித் தலைவர் ஜெயித்த ஆண்டிப்பட்டி தொகுதியில் இரட்டை இலை தோற்கிறது என்றால் நீங்கள் வேட்டி கட்டலாமா? முடிந்தால் என்னை கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள். ஆளுங்கட்சிதான் கனவுலகத்தில் இருக்கிறது.


திமுகவிற்கு எம்பிக்கள் இருக்கலாம், ஆனால் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. கூட்டணி இல்லாமல் திமுகவால் தேர்தலில் போட்டியிட முடியுமா? 2021 தேர்தலில் நூலிழையில்தான் அதிமுகவுக்கு வெற்றி வசமாகவில்லை. திமுக அரசு மேல் நம்பிக்கையில்லாததால் கூட்டணிக் கட்சியினரே எதிர்க்கட்சிபோல் போராட்ட களத்திற்கு வந்துள்ளனர். இல்லம் தேடி மருத்துவம் இல்லை.. இல்லம் தேடி மழைநீர் தான் இருக்கிறது” என்றார்.