×

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு - அமைச்சர் தகவல்!! 

 

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவித்தார். அதன்படி 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி  அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து   மூடப்பட்டது.அத்துடன் டாஸ்மாக்கில் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை 99% தடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.