×

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

 

அடுத்த 24 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் குறைந்ததாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கில் 720 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவந்த புயல் சின்னம் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகருவதாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுமென்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.