×

சென்னை மக்களே உஷார்... நாளை ரெட் அலர்ட்!

 

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு வங்கக்கடலில் பெங்கல் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. புயலாக வலுப்பெற்றதால் மேற்கு - வட மேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே பெங்கல் புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று(நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூரில் இன்று(நவ.29) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி_ பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் இன்று(நவ.29) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30)
அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.