×

 தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் அறிவிப்பு 

 

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மீனவர் நலனில் அக்கரை கொண்டுள்ள இவ்வரசானது, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டு போன 21 விசைப் படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,00,000/- மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,50,000/- ஆக மொத்தம் 33 படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கி அரசாணை (ப)எண். 523, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்(மீன்6)துறை, நாள் 14.08.2023-ல் ஆணைகள் வெளியிடப்பட்டது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.