×

கள்ளக்குறிச்சியில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா?- ஆளுநர் ரவி

 

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாட்டில் உள்ள சிலர், பாகிஸ்தான், துபாயில் உள்ள சிலருடன் இணைந்து ஹெராயின் இறக்குமதி செய்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் இறக்குமதி என என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள சம்பவம் ஒரு இருண்ட நிகழ்வு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் மனவலியை தருகிறது. போதைப் பொருளினால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை நம் நாடு பார்த்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டு பஞ்சாப். போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாவதன் மூலம் நம் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. 

நான் தமிழகம் வந்த நாள் முதல், பெற்றோர்கள் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள் Synthetic drugs உள்ளது என கூறுகின்றனர். அவர்களுக்கு தெரிவது இங்கு உள்ள அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் உள்ளது" என்றார்.