பிரதமர் மோடி நாட்டில் ராம ராஜ்ஜியத்தை நடத்திவருகிறார்- ஆளுநர் ரவி
Aug 12, 2024, 22:48 IST
ராமேஸ்வரம் லட்சுமண தீர்த்தத்தில் கம்பன் விழாவின் 35வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மற்றும் நற்செய்தியைப் பரப்புவதில் கம்பரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நாட்டில் ராம ராஜ்ஜியத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர். யாரும் ஊரே யாவரும் கேளிர் என்ற வகையில் நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது.
அனைவரும் சமூக ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும். நமது ஆன்மிக மற்றும் கலாசார நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட நீதி மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும், கருணை மற்றும் இணக்கமான உலகுக்காக அவற்றை நமது எல்லைகளைக் கடந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.