×

நாளை அனைவரும் தங்கள் வீடுகள் முன் தீபம் ஏற்றி வழிபடுங்கள்- ஆளுநர் ரவி

 

அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு  கேட்டுக்கொள்கிறேன் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்ட மாக ராமர் கோயில் கும்பாபிஷேகம் மாற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை 22ம் தேதி நடைப்பெறுகிறது.  இந்த வைபவத்தை உலகமே உற்று நோக்கும் வகையில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் கோயில் பணிகள் முழு வீச்சில் முடிந்துள்ளன. நாடு முழுதும் உள்ள பக்தர்கள் இவ்விழாவிற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.