×

தலை துண்டித்து ரவுடி கொலை- 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பிரபல ரவுடி தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவெறும்பூர் அடுத்த பனையக்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தர் ராஜ். பிரபல ரவுடியான இவர் மீது திருவெறும்பூர், அரியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிசத்துடன் சேர்த்து சுந்தர்ராஜ் பெயிண்டிங் வேலைக்கும் அவ்வப்போது சென்றுவந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு திருமணத்தை மீறிய உறவு பிரச்சனை காரணமாக ரவுடி சுந்தர்ராஜ் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தங்கையுடனான தொடர்பை துண்டிக்குமாறு கூறியும் கேட்காததால்  ரவுடி சுந்தர்ராஜ் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். மொட்டை மாடியில் உறங்கி கொண்டிருந்த சுந்தர்ராஜை கும்பல் வ்ட்டி சென்றது. காலை நீண்ட நேரமாகியும் சுந்தர்ராஜ் கீழே வராததால் அவரது குடும்பத்தினர் மொட்டை மாடி சென்று பார்த்தபோது, அவர் கழுத்து வெட்டப்பட்டு சடலமாக கிடந்தார்.