×

நாட்றம்பள்ளி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி

 

நாட்றம்பள்ளி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சென்ட்டியூர் என்ற இடத்தில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 7 பெண்கள் மரணம் அடைந்தும், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மரணமடைந்த 3 பெண்களின் சடலங்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று  இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசு சார்பில் இருந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சமும் , படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் தமிழக அரசு அறிவித்திருப்பதாக பேட்டி அளித்தார். 

இந்நிலையில் திருப்பத்தூரில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தது வருத்தமளிப்பதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.