×

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மது விலக்குத்துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கூறி வருகின்றனர். அதே சமயம், திமுக அரசு மீது பழிபோடுவதற்காக இந்த மரணங்களுக்கு பின்னால் அரசியல் சதி இருக்கலாம் என்றும் திமுக தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக பேசி வருவதைக் குறிப்பிட்டு, அண்ணாமலையின் சதித்திட்டம் தான் இது என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “பாரதிய ஜனதா கட்சி ஆளுகிற மாநிலத்தில் இருந்து தான் மெத்தனால் வந்திருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. இவர் அனுப்பி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டாரோ என்ற சந்தேகம் என்னைப் போன்றோருக்கு எழுந்திருக்கிறது” எனக் கூறியிருந்தார்.