அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு!
நகர்ப்புற பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு நடப்பு ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்கள். "நகர்ப்புற பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.