×

ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு.. ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள்..!

 

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து குறித்து இணையத்தில் பல விதமான பதிவுகளும் , வீடியோக்களும் போர் தொடக்க இதற்கு அமீன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த விவாகரத்து விவகாரம் குறித்து முதல் முறையாக சாய்ரா பானு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாய்ரா பானு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறிருப்பதாவது :

நான் இப்போது மும்பையில் இருக்கிறேன்; கடந்த 2 மாதங்களாக எனது உடல்நிலை சரியில்லை; அதனால் தான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து விலகியிருக்கிறேன்; அவரைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம்

உலகிலேயே தலைசிறந்த மனிதர் அவர்; என்னுடைய குழந்தைகள், ஏ.ஆர்.ரஹ்மான் என யாரையும் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை

அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது; அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்; அதே அளவு அவரும் என்னை நேசிக்கிறார்; அவர் பெயருக்கு யாரும் களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.