×

"SBI ATM-தான் இவங்களோட மெயின் டார்கெட்.."- சேலம் சரக டிஐஜி உமா பேட்டி 

 

ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிப்பதே இவர்கள் வேலை என சேலம் சரக டிஐஜி உமா பேட்டியளித்துள்ளார்.

ஏடிஎம் கொள்ளையர்களை என்கவுன்டர் செய்த சம்பவத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் சரக டிஐஜி உமா, “திருச்சூரில் கொள்ளை சம்பவம் நடந்த பிறகு மேற்கு மண்டலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. அதன்பேரில்தான் இவர்களை சந்தேகத்தில் பிடிக்க முயன்றனர். அப்போது கற்களை வீசி போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தப்பிச் சென்ற இருவரில் ஜூமான் என்பவர் போலீசாரை தாக்கியதால் என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்றொருவரான அஸ்ரூ என்பவரை காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 5 பேரும் ஹரியானாவை சேர்ந்தவர்கள். இவர்கள் ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் என்பது தெரியவந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களை குறிவைத்து கூகுள் மேப் உதவியோடு கொள்ளையடித்துள்ளனர். பணம் அதிகமாக இருக்கும் என்பதால் எஸ்.பி.ஐ ஏடிஎம்க்கு தான் குறி.

கண்டெய்னரில் இருந்த காரை பயன்படுத்தி ஏடிஎம்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு தமிழகம் புறப்பட்ட 2 கும்பல் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது.