×

“சமீப கால செயல்பாடுகள் சரியில்ல”- மற்றொரு நாதக மாவட்ட செயலாளர் விலகல்

 

கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என கூறி கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். 

குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறி வருவது அக்கட்சியில் தலைவர் சீமானை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அண்மையில் கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர்.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளராக உள்ள ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெகதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் அ.ஜெகதீஷ் http://M.Sc.,M.Phil.,DMI,Ph,D,. ஆகிய நான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இதுவரை என்னோடு களமாடிய உண்மையான களபோராளிகளுக்கும் என்னுடைய புரட்சிகர நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது கடினமாக இருந்தாலும் சமீப கால செயல்பாடுகள், கட்சியின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தாது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன் அடிப்படையில் கனத்த இதயத்தோடு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் கொள்கை கோட்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் நினைவில் தமிழ் தேசியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் நன்றி....” எனக் குறிப்பிட்டுள்ளார்.