×

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கையை தொடர உத்தரவு.. 

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கையை தொடர தொழிலாளர் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கையை தொடர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தின் படி குற்றம் இழைத்தவர் என அரசாணை வெளியிட்டு, அவர் மீது  குற்றவியல் வழக்கு தொடர தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் நான்கு பேரை சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்ததாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் இந்த ஜூன்  30 ஆம் தேதியுடன் முடியவிருந்த நிலையில், அவருக்கு அடுத்த ஆண்டு (2025 ஆம் ஆண்டு) மே 19 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.