கேண்டிடேட்ஸ் செஸ் - வரலாறு படைத்த குகேஷுக்கு சசிகலா வாழ்த்து
Apr 22, 2024, 12:01 IST
கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்ததற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அவர்கள் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளதோடு, இந்த இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருப்பது மிகவும் பெருமையளிக்கிறது.