×

அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன்- சசிகலா

 

7 ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு பங்களாவுக்கு சசிகலா சென்றடைந்தார். அவருடன் இளவரசியும் சென்றார். அவரை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொடநாட்டில் கண்ணீர் மல்கப் பேட்டியளித்த வி.கே.சசிகலா, “கொடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்துள்ளேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது திறக்கப்படும். அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும். அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்” என்றார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல் முறையாக கொடநாடு எஸ்டேட் சென்றுள்ள சசிகலா, நாளை பங்களா முன்பு ஜெயலலிதா சிலை வைக்க நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்கவுள்ளார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் பெயரில் தியான மடம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜையை சசிகலா செய்கிறார். அதன்பின் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை பிப்ரவரி 24ல் சசிகலா திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.