×

விஜயின் அரசியல் பயணம்...சசிகலா ஒரே வார்த்தையில் பதில்...!

 

விஜயின் அரசியல் பயணம் தொடர்பாக 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தெரியும் என சசிகலா தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அதற்கு அவர் நிதானமாக பதில் அளித்தார். முதலாவதாக அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது, புதிய கட்சிகள் களத்திற்கு வந்துள்ளன, தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி விஜய் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார், அதை எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சசிகலா, விஜயின் அரசியல் பயணம் தொடர்பாக 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தெரியும் என தெரிவித்தார். 

இதேபோல் தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, திமுக ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆக போகிறது. இந்த ஆட்சி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. இந்த ஆட்சி எப்போது நிறைவடையும் என்று தான் மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர் என கூறினார். இதேபோல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூரினார்.