×

போயஸ் கார்டனில் குடியேறினார் சசிகலா!

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே பிரம்மாண்ட வீடுகட்டி அதில் குடிபுகுந்தார் அவரது தோழி சசிகலா.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த 2020 ஆம் ஆண்டு பெங்களூர் சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா தியாகராய நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் போயஸ் கார்டன் எதிரே  மூன்று தளம் கொண்ட பிரம்மாண்ட பங்களாவை கட்டி முடித்துள்ளார் சசிகலா. இன்று அதிகாலை புதிதாக கட்டப்பட்ட பங்களாவின் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றனர்.

போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி நிழல் அரசாங்கம் ஆகவே செயல்பட்டு வந்த சசிகலா, ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது வேதா இல்லம் ரத்த சொந்தமான தீபா, மாதவனுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி கைமாறியதால் அவரது வீட்டுக்கு எதிரே பிரம்மாண்ட பங்களாவை கட்டினார். அதில் இன்று குடியேறிவிட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு முதன்முறையாக கிரகப்பிரவேசம் நடத்தவே சசிகலா போயஸ் தோட்டத்திற்கு வருகை தந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

போயஸ் கார்டன் தனக்கு ராசியான இடம் என சசிகலா கருதுவதால், இங்கு குடியேறியிருப்பதாகவும், இனி நாடாளுமன்ற தேர்தல் பணியில் தீவிரமாக இறங்குவார் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.