×

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்! ஈபிஎஸ்க்கு வலுக்கும் கோரிக்கை

 

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக 6வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதிவாரியாக நிர்வாகிகளுடன்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். இன்றைய கூட்டத்தில் காலையில் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகளுடனும், மாலையில், நெல்லை நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது தோல்விக்கு காரணமான மாவட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என ராமநாதபுரம் நிர்வாகிகள் வலியுறுத்தினர். மேலும் சிலர் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி பலமாக அமையும். ஆகவே வரும் தேர்தலில் நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.