×

மழையால் தத்தளிக்கும் சென்னை- பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க சசிகலா வேண்டுகோள்

 

தமிழகத்தில்‌ கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும்‌ மழையால்‌ பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள தமிழக அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளில்‌ காலை முதல்‌ விட்டு விட்டு பெய்து வரும்‌ மழையால்‌ பல்வேறு இடங்களில்‌ மக்கள்‌ மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில்‌ வடகிழக்கு பருவ மழையே இன்னும்‌ முழுமையாக ஆரம்பிக்காத நிலையில்‌ தலைநகரில்‌ பல்வேறு இடங்கள்‌ மழைநீரால்‌ தத்தளித்து கொண்டு இருக்கறது. இதன்‌ மூலம்‌ திமுக தலைமையிலான விளம்பர அரசன்‌ லட்சணம்‌ என்னவென்று தற்போது நிரூபணம்‌ ஆகியுள்ளது.  தற்போது பெய்து வரும்‌ மிதமான மழைக்கே கிண்டியிலிருந்து வேளச்சேரி செல்லும்‌ சாலையில்‌ மழை நீர்‌ வெளியேற வழியின்றி, குளம்‌ போல்‌ தேங்கி இருப்பதால்‌ மக்களின்‌ இயல்பு வாழ்க்கை மிகவும்‌ பாதக்கப்பட்டுள்ளது. மேலும்‌, வேளச்சேரி செக்‌ போஸ்ட்‌ பேருந்து நிலையத்திலிருந்து ரேஸ்கோர்ஸ்‌ சாலை முழுவதும்‌ மழை நீர்‌ தேங்கி இருப்பதால்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ வாகன ஓட்டிகள்‌. கடும்‌ சிரமத்திற்கு ஆளாயுள்ளனர்‌.  

அதேபோன்று, சென்னையில்‌ ராமாபுரம்‌ கலசாத்தம்மன்‌ கோவில்‌ தெருவில்‌ உள்ள பிரதான சாலை குண்டும்‌, குழியுமாக, சேறும்‌, சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில்‌ செல்லும்‌ வாகன ஓட்டிகள்‌ தாங்கள்‌ எப்போது கீழே விழுவோம்‌ என்ற அச்சத்திலேயே, விபரீத பயணம்‌ மேற்கொண்டு வருவது மிகவும்‌ வேதனை அளிக்கிறது. இப்பகுதியில்‌ உள்ள பெரியவர்கள்‌, சிறியவர்கள்‌, கர்ப்பிணி பெண்கள்‌ என அனைத்து தரப்பினரும்‌ கடும்‌ சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்‌. மேலும்‌, இப்பகுதியில்‌ உள்ள பிரதான சாலையில்‌ பராமரிப்பு வேலை நடப்பதாக சொல்லி அடிக்கடி மூடி விடுவதால்‌ சுமார்‌ 5 இமி தூரம்‌ சுற்றி போக வேண்டியுள்ளதாக சொல்லி இப்பகுதி மக்கள்‌ மிகவும்‌ வேதனைப்படுகின்றனர்‌. 

அதேபோன்று விமான நிலைய பகுதிகளில்‌ பெய்த மழையின்‌ காரணமாக தேங்‌கயுள்ள மழை நீரில்‌ வாகனங்கள்‌ நீந்தி செல்ல வேண்டிய அவல நிலை இருக்கிறது.  சென்னையில்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைக்கும்‌ பணிக்கு 4000 கோடி ரூபாய்‌ செலவு செய்திருப்பதாக சென்னை மாநகராட்‌சி மேயர்‌ முதல்‌ திமுகவை சேர்ந்த அமைச்சர்கள்‌, நிர்வாகிகள்‌ என அனைவரும்‌ மேடைக்கு மேடை பேசி வந்தனர்‌. ஆனால்‌ இதில்‌ உண்மை இல்லை என்பது தற்போது நிரூபணம்‌ ஆகிவிட்டது. முறையாக செலவு செய்து சரியாக பணிகளை செய்திருந்தால்‌ சாலைகளில்‌ இந்த அளவுக்கு மழைநீர்‌ தேங்க வாய்ப்பு இல்லை. தமிழக முதல்வரும்‌ ஆய்வு பணிகளை செய்வதாக சொல்கின்றனர்‌. ஆனால்‌ அதனால்‌ எந்த பயனும்‌ இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

தமிழகத்தில்‌ நாளை சில மாவட்டங்களில்‌ கனமழை பெய்ய இருப்பதால்‌ ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல்‌ ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை இருப்பதாகவும்‌, அதேபோன்று கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம்‌ உள்ளிட்ட மாவட்டங்களிலும்‌ பரவலாக மழை பெய்யக்கூடும்‌ என வானிலை ஆய்வு மையம்‌ கூறியுள்ளது. மேலும்‌, தமிழகத்தில்‌ உள்ள அனைத்து பகுதிகளிலும்‌ பரவலாக மழை பெய்து வருவதால்‌, தமிழக மக்களின்‌ பாதுகாப்பினை கருத்தில்‌ கொண்டு, தமிழகத்தின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ உள்ள ஆட்சியர்கள்‌ மற்றும்‌ அரசு அதிகாரிகள்‌ மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும்‌ உடனே மேற்கொள்ள வேண்டும்‌ என கேட்டுக்கொள்கிறேன்‌.  

புரட்சித் தலைவி அம்மா அவர்கள்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ தமிழக மக்களை பாதுகாக்க மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைளைப்‌ போன்று, டிமுக தலைமையிலான அரசு மழையால்‌ பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்‌ இருப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தரவேண்டும்‌. மழை நீர்‌ சூழ்ந்துள்ள பகுதிகளில்‌ உள்ள வெள்ளநீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும்‌. தாழ்வான குடியிருப்புகளில்‌ உள்ளவர்களுக்கு தங்குமிடம்‌ குடிநீர்‌ உணவு போன்ற, அதீதியாவசிய தேவைகளை தடையின்றி கிடைக்க ஆவனசெய்யவேண்டும்‌. மேலும்‌, மின்சார துறையை சேர்ந்தவர்கள்‌ விழிப்புடன்‌ செயல்பட்டு பொதுமக்களுக்கு மின்‌ விநியோகத்தில்‌ எந்தவித இடையூறும்‌ ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்‌. 

அதேபோன்று மாநகராட்சி மற்றும்‌ பொதுப்பணித்துறையை சேர்ந்த ஊழியர்கள்‌ சாலைகளில்‌ மழைநீர்‌ தேங்காமல்‌, போக்குவரத்து தடையின்றி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்‌. நீர்நிலைகள்‌, கால்வாய்களை தொடர்ந்து பராமரித்து மழைநீர்‌ வெளியேறும்‌ வகையில்‌ பார்த்துக்கொள்ளவேண்டும்‌ என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்‌. திமுகவினர்‌ தேர்தல்‌ சமயத்தில்‌ ஏதாவது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விடலாம்‌ என்று தப்புக்கணக்கு போடுவதை விட்டுவிட்டு, வாக்களித்த மக்களின்‌ நலனைக்‌ கொஞ்சமாவது நினைத்து பார்த்து எதிர்வரும்‌ மழைக்காலத்தில்‌ தமிழக மக்களை பாதுகாத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்‌ விரைந்து எடுக்க வேண்டும்‌ என திமுக தலைமையிலான விளம்பர அரசைக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.