×

உயர்த்தப்பட்ட வாகன வரியை உடனே திரும்ப பெற வேண்டும்- சசிகலா

 

திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில்‌ உள்ள ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு, உயர்த்தப்பட்ட வாகன வரியை உடனே திரும்ப பெற வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்‌ அனைத்து விதமான வாகனங்களுக்கும்‌ வரியை திமுக தலைமையிலான அரசு உயர்த்தி இருப்பது மிகவும்‌ கவலையளிக்கிறது. அதாவது சரக்கு வாகனங்கள்‌, வாடகைக்கு இயக்கப்படும்‌ வாகனங்கள்‌, பயணிகள்,‌ போக்குவரத்து வாகனங்கள்‌, சுற்றுலா வாகனங்கள்‌, ஒப்பந்த வாகனங்கள்‌, ஆம்னி பேருந்துகள்‌, அனைத்து வகை புதிய மற்றும்‌ பழைய 2 சக்கர வாகனங்கள்‌, ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள்‌, கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகள்‌ மற்றும்‌ வாகனங்கள்‌, கட்டுமானத்திற்கு பயன்படும்‌ வாகனங்கள்‌, கார்கள்‌, டாக்சிகள்‌, 'கேபிகள்‌ என அனைத்து வகை மோட்டார்‌ வாகனங்களுக்கும்‌ வரியை உயர்த்தி, தமிழகத்தில்‌ வாழும்‌ மக்களுக்கு இமுக தலைமையிலான அரசன்‌ தீபாவளி பரிசாக ஒரு மிகப்பெரிய சுமையை மக்களின்‌ மீது இறக்கயிருப்பது மிகவும்‌ கண்டனதீதிற்குரியது.  

திமுக தலைமையிலான அரசு அறிவித்துள்ள வாகனங்களுக்கான வரி உயர்வின்‌ மூலம்‌ இருசக்கர வாகனங்களின்‌ விற்பனை விலை மேலும்‌ உயரக்கூடும்‌. அதாவது, குறைந்த திறன்‌ கொண்ட இருசக்கர வாகனங்களின்‌ விலையே குறைந்தது ரூ.7 ஆயிரம்‌ முதல்‌ ரூ.8 ஆயிரத்திற்கும்‌மேல்‌ அதிகரிக்கும்‌ நிலையில்‌, இனி வரும்காலங்களில்‌ சாமானிய நடுத்தர மக்களுக்கு இரு சக்கர வாகனங்களை வாங்குவது என்பது எட்டாக்கனியாகவிடும்‌. இதற்காகவா தமிழக மக்கள்‌ வாக்களித்தனர்‌?  தமிழகத்தில்‌ சாலை வரியை ஏற்கனவே திரு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான்‌ உயர்த்தியது. அதாவது கடந்த 2008ஆம்‌ ஆண்டு இரு சக்கர வாகனங்களுக்கும்‌, 2070-ம்‌. ஆண்டு நான்கு சக்கர வாகனங்களுக்கும்‌ சாலை வரி உயர்த்தப்பட்டது. அதன்‌ பின்னர்‌ புரட்சித்தலைவி அம்மா அவர்கள்‌ தலைமையிலான ஆட்சியில்‌ கடுமையான நிதி நெருக்கடிகளை திறமையாக சமாளித்த போதும்‌, மக்கள்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு சாலை வரி உயற்த்தப்படவே இல்லை. 

தற்போது, சுமார்‌ 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய இமுக ஆட்சியில்‌ மீண்டும்‌ வாகன வரியை உயர்த்தியிருப்பது இன்றைய ஆட்சியாளர்களின்‌ நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. திமுகவினரின்‌ தவறான நடவடிக்கைகளால்‌ தமிழக மக்கள்‌ பாதிக்கப்படுவது மிகவும்‌ வேதனை அளிக்கிறது.  மேலும்‌, திமுக தலைமையிலான அரசின்‌ புதிய வரிவிதிப்பால்‌, ரூ.1 லட்சம்‌ வரை மதிப்பிலான இருசக்கர வாகனங்களுக்கு 10 சதவீதம்‌ எனவும்‌, ரூ.1 லட்சத்துக்கும்‌ அதிகமான விலைக்கு வாங்கப்படும்‌ வாகனங்களுக்கு 12 சதவீதமாகவும்‌ வாழ்நாள்‌ வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, பழைய இருசக்கர வாகனங்களில்‌ ஒரு ஆண்டு பழையதாக உள்ளவற்றுக்கு 8.25 சதவீதம்‌ (ரூ.1 லட்சத்துக்கு மிகாமல்) மற்றும்‌ ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக இருப்பவைகளுக்கு 10.25 சதவீதம்‌, 1 ஆண்டு முதல்‌ 2 ஆண்டுகள்‌ பழையதாக உள்ளதற்கு (ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல்‌) 8 சதவீதம்‌, ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்டவற்றுக்கு 10 சதவீதம்‌ என வாழ்நாள்‌ வரி நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.


கார்களை பொருத்தவரை ரூ.10 லட்சம்‌ வரை மதிப்பிலான வாகனங்களுக்கு 10 சதவீதமும்‌, ரூ.10 லட்சத்துக்கும்‌ அதிகமான விலைக்கு வாங்கப்படும்‌ வாகனங்களுக்கு 13 சதவீதமும்‌ இதுநாள்‌வரை வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்‌, தற்போது இதை மாற்றியமைத்து ரூ.5லட்சம்‌ வரையிலான கார்களுக்கு 12 சதவீதமும்‌, ரூ.5 லட்சம்‌ முதல்‌ ரூ.`10 லட்சம்‌ வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும்‌, ரூ.10 லட்சம்‌ முதல்‌ ரூ.20 லட்சம்‌ வரையிலான கார்களுக்கு 18 சதவீதமும்‌, ரூ.20. லட்சத்துக்கு அஇகமான கார்களுக்கு 20 சதவீதம்‌ என வரலாறு காணாத வகையில்‌ வரியை உயர்த்தியிருப்பது நியாயமற்றது. 

இது தமிழக மக்களை வஞ்சிக்கும்‌ செயல்‌,  வாடகை பயணிகள்‌ போக்குவரத்து வாகனங்களில்‌, சுற்றுலா மற்றும்‌ ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டுவரி ரூ.4,200-ஆகவும்‌, 35 பேருக்கு மேல்‌ பயணித்தால்‌ இருக்கைக்கு. ரூ.4 ஆயிரமும்‌, படுக்கை வசதி கொண்ட  ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம்‌ முதல்‌ ரூ.4 ஆயிரம்‌. வரையிலும்‌ வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்‌, பசுமை வரியாக 15 ஆண்டுகள்‌ நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு 750 ரூபாயும்‌, இதர மோட்டார்‌ வாகனங்களுக்கு 1500 ரூபாயும்‌, சென்னை, மதுரை, கோவை நகர கற்றுப்பகுதிகளில்‌ இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு ரூ.400 முதல்‌ ரூ.1800 வரை மேல்வரியும்‌ கூடுதலாக விஇக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில்‌ ஏற்கனவே விலைவாசி ஏற்றம்‌, வேலையில்லா திண்டாட்டம்‌, சொத்துவரி உயர்வு, ஆவின்‌ பால்‌ பொருட்களின்‌ விலையேற்றம்‌, வரலாறு காணாத வகையில்‌ மின்‌ கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, நிலம்‌ மற்றும்‌ மனைகளின்‌ வழிகாட்டி மதப்பு உயர்வு, நெடுஞ்சாலைகளில்‌ பயணிக்க அதிகளவிலான சுங்க கட்டணம்‌ போன்ற காரணங்களால்‌ தமிழக மக்களை இமுக தலைமையிலான அரசு கசக்க பிழிந்து வரும்‌ சூழலில்‌, தற்போது வாகனங்களுக்கான வரியையும்‌ உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம்‌? பொதுமக்களுக்கு பெரும்‌ சுமையாகிவிடும்‌.

இதனால்‌ ஏழை எளிய சாமானிய மக்களின்‌ வாழ்வாதாரம்‌ முற்றிலும்‌ சீரழிந்துவிடும்‌. மேலும்‌, கடந்த ஜூன்‌ மாதமே இமுக தலைமையிலான அரசு இதுபோன்று வாகன வரியை உயர்த்தப்போவதாக தகவல்‌ வந்தவுடன்‌ அதை உடனடியாக கைவிட வேண்டும்‌ என அறிக்கையின்‌ வாயிலாக வேண்டுகோள்‌ விடுத்திருந்தேன்‌. ஆனால்‌, எதைப்பற்றியும்‌ கண்டுகொள்ளாத இமுக தலைமையிலான அரசு இன்றைக்கு வாகன வரியை உயர்த்தியிருப்பத  மிகவும்‌ கண்டனத்திற்குரியது.  

திமுக தலைமையிலான அரசு தமிழ்நாட்டில்‌ இதுபோன்று அனைத்து வாகனங்களின்‌ வரியை அநியாயமாக உயர்த்தியிருப்பதன்‌ மூலம்‌ மக்களுக்கு அன்றாடம்‌ தேவைப்படும்‌ காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களின்‌ விற்பனை விலையும்‌ பன்மடங்கு உயரும்‌, அபாயம்‌ உள்ளது. இதன்‌ காரணமாக தமிழக மக்களின்‌ வாழ்வாதாரம்‌ கடுமையாக பாதிக்கப்படும்‌.  திமுகவினர்‌ தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, ஏமாற்றி ஆட்சிக்கு வந்த 30 மாத காலத்தில்‌ மக்களுக்கு பயனளிக்கும்‌ வகையில்‌ எந்தவிதமான நல்ல. சட்டங்களும்‌ கொண்டுவராமல்‌, மக்களிடமிருந்தே அடித்து பிடுங்குவது மிகவும்‌ கொடுமையானது. எனவே தமிழகத்தில்‌ உள்ள ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்களின்‌ நலனைக்கருத்தில்‌ கொண்டு வாகன வரியை உயர்த்தும்‌ முடிவை உடனே திரும்ப பெற வேண்டும்‌ என தமிழக அரசைக்‌ கேட்டுக்கொள்கறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.