×

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?- உச்சநீதிமன்றம் கேள்வி

 

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?, சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

குண்டர் சட்டத்தின் கீழான கைதுக்கு எதிரான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில் சவுக்கு சங்கரின்  யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கரை விடுவித்தால்  பொது ஒழுங்கு கெடும், சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யூடியூபர் சவுக்கு சங்கர் இதுபோன்று அவதூறுகள் தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டவர்; தற்போது பெண் போலீஸார் குறித்தும் அவதூறு மற்றும் குற்றச்சாட்டுகளை கூறி பேட்டி அளித்துள்ளார் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி சுதான்சு துலியா அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?, சவுக்கு சங்கர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா? சவுக்கு சங்கரை ஏன் இடைக்கால ஜாமினில் விடுவிக்ககூடாது? என கேள்வி எழுப்பியது. மேலும் சவுக்கு சங்கரின் நடத்தையும் மன்னிக்க முடியாத ஒன்று தான்,  குண்டர் தடுப்பு காவல் என்பது மிக முக்கியமான சட்டம். எனவே தமிழ்நாடு அரசு மிகக்கடுமையாக நடந்து கொள்ள முடியாது, மாறாக சரியாகச் செயல்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், வரும் 18 ஆம் தேதி அன்று பதிலளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்டுள்ளது. குறிப்பிடதக்கது.