×

கார் ரேஸ் நடத்தி முடிக்கும் வரை நான் வெளியே வரக்கூடாதுனு உதயநிதி ஸ்டாலின் உத்தரவு: சவுக்கு சங்கர்

 

என் மீதான எல்லா வழக்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.


பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்  கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அண்மையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யபட்டது.  அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.இந்நிலையில் இன்று சிவகங்கை கூடுதல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். பெண் காவலர்களை இழிவாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது மதகுபட்டி சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி தொடர்ந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சிவகங்கை கூடுதல் மகளிர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில் சிவகங்கையில் நீதிமன்றம் முன் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “சென்னையில் கார் பந்தயம் நடத்தி முடிக்கும் வரையில் நான் ஜெயிலை வெளியே வரக்கூடாது என உதயநிதி உத்தரவிட்டுள்ளார். அதனால்தான் நான் தினம் தினம் புதிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுவருகிறேன். என் மீதான எல்லா வழக்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம்” என்றார்.