×

"என்னை பார்த்து அஞ்சுறாங்க அதனால தான்.." திடீரென கத்தி சொன்ன சவுக்கு சங்கர்  

 

என்னை பார்த்து திமுக அரசு அஞ்சுகிறது என ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளரும், அரசியல் திறனாய்வாளருமான சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பெண் காவலர்கள் குறித்துப் பேசியது உட்படப் பல்வேறு வழக்குகளில்  சவுக்கு சங்கர் ஜாமின் பெற்றுள்ள நிலையில், குண்டர் சட்டமும் ரத்தாகியதால் ஒருசில நாட்களில் விடுதலையாகலாம் எனும் வாய்ப்பிருந்தபோது, இப்போது கஞ்சா வைத்து இருந்ததாக அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்நிலையில் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சவுக்கு சங்கரை போலீசார் அழைத்துவந்தனர். அப்போது, “என்னை பார்த்து அஞ்சும் அளவுக்கு திமுக அரசு உள்ளது. அதனால் தான் இரண்டாம் முறை குண்டாஸ் போடப்பட்டுள்ளது” என பத்திரிக்கையாளரை நோக்கி கத்தியபடி சவுக்கு சங்கர் சென்றார். அவரை போலீசார் சூழ்ந்து கொண்டு பேசவிடாமல் விறுவிறுவென அழைத்து சென்றனர்.