×

சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

 

சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் மாவட்டங்களில் நாளை  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக மாறி தமிழக கடற்கரை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.


இந்நிலையில் மாணவர்களின் நலன்கருதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் மாவட்டங்களில் நாளை (நவ.27) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாகை, கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.