×

சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

 

சென்னையில் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 


இந்த நிலையில், சென்னையில் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சென்னையில் இன்று (12|11|2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.  சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என முதலில் தெரிவித்திருந்த நிலையில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.