×

தேவநாதனின் வின் டிவிக்கு சீல்

 

நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கிய தேவநாதனின் வின் டிவிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதன் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், ₹4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து, நிதி நிறுவனம், தேவநாதனின் தனியார் தொலைக்காட்சி (WIN TV) நிறுவனத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.