×

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு

 

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு163(1) (பழைய  144)  தடை உத்தரவு பிறப்பித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் உத்தரவிட்டுள்ளார். 

எதிர்வரும் செப்டம்பர் 11ம் தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனாருடைய  நினைவு தினம்மற்றும் அக்டோபர் 31ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுவதை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று துவங்கி அக்டோபர் 31ஆம் தேதி வரை 144  தடை உத்தரவு புதிய சட்டப்பிரிவு 163(1) கீழ் தடை உத்தரவு  பிறப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.