×

“எஸ்பியின் சாதி என்னவென்றே எனக்கு தெரியாது”- சீமான் விளக்கம்

 

திருச்சி எஸ்பி வருண்குமாரின் சாதி என்னவென்றே சீமானுக்கு தெரியாது என சீமான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார். சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார். ஐபிஎஸ் வருண்குமார் தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்களுக்கு எதிராக செயல்படுகிறார். தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்கள் மீது வருணுக்கு பிறப்பு வெறுப்பு. ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் தன்னை ஜாதிய ரீதியாக பேசியதற்கு விளக்கம்கேட்டும், மான நஷ்ட ஈடு கேட்டும் எஸ்பி வருண்குமார் சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸ்க்கு பதில் அளித்துள்ள சீமான் தரப்பு வழக்கறிஞர், “திருச்சி எஸ்பி வருண்குமாரின் சாதி என்னவென்றே சீமானுக்கு தெரியாது. சாட்டை துரைமுருகன் கூறியதை உண்மை என நம்பி சீமான் பேசினார். எஸ்பியை சாதிய ரீதியாக இழிவுப்படுத்தும் எண்ணம் சீமானுக்கு இல்லை. வருண்குமார் எஸ்பி மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர் வளர்ந்து வரும் அதிகாரி டிஜிபி வரைக்கும் அவர் போவார். சாட்டை துரைமுருகனிடம் வருண்குமார் அவர்களின் ஜாதி இது என்று ஒரு காவல் அதிகாரி கூறியதாக என்னிடம் சொன்னதை நான் பேசிவிட்டேன்” என்றார்.