×

ரஜினிகாந்த் உடன் சீமான் திடீர் சந்திப்பு! ஒரு மணிநேரம் ஆலோசனை

 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இரவு 8 மணி அளவில் ரஜினிகாந்த்- சீமான் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீண்ட இந்த சந்திப்பில் இருவரும் தற்கால அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்குப்பின் நடிகர் ரஜினிகாத்தை நேரடியாக சீமான் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.