×

G20 -க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றது ஏன்?- சீமான் கேள்வி

 

நாட்டின் முதல் குடிமகனாக இருந்தும் தீண்டாமை இன்றும்  ஒழியவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.


ஜனநாயக குரல்வலையை நெரிக்கும்  என்.ஐ.ஏ என்ற சட்டத்தை கொண்டு வந்த ப.சிதம்பரம் ஜனநாயகத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? வெள்ளைக்காரன் கொண்டு வந்ததால்  ஒவ்வொன்றாக மாற்றுகிறோம் என்கிறார்கள். வெள்ளைக்காரன் கொண்டு வந்தது தான் இந்துமதம். இந்து என்பதற்கு பெயர் மாற்றம் செய்ய முடியுமா? நாட்டின் முதல் குடிமகனையே கோவிலுக்குள் விடவில்லை. என்ன தர்மம் பேசிகிறார்கள்? நாட்டின் முதல் குடிமகனாக இருந்தும் தீண்டாமை இன்றும்  ஒழியவில்லை. கல்வி, மேம்பாடு, அரசியல், அதிகாரம், வேற்றுமையில் ஒற்றுமை, சகோதரத்துவம், சமத்துவம் என்றெல்லாம் எதற்கு பேச வேண்டும்.

சனாதனம் வேண்டும் என்பவர்கள் நம் நாட்டுக்கு இந்த கோட்பாடுகள் எல்லாம் எதற்கு? இவர்கள் போன்ற கோமாளி இருக்க முடியாது. இது அடிமை இந்தியா. தமிழகத்தில் சட்டம்,  ஒழுங்கு சீர்கேடு திமுக ஆட்சிக்கு வந்தாலே தொடர்ந்து நடக்கும் என்பது தெரியும். பள்ளி, கல்லூரி மாணவன் கைக்கு எப்படி கஞ்சா போகுது? சமூகம் குற்ற சம்பவமாக  மாற்றப்பட்டுள்ளது. குற்றச்சமூகம்  குற்ற சம்பவம்தான்  உருவாக்கும். இறை நம்பிக்கை உள்ள எல்லோரும் போற்றும் ஆட்சியாக திமுக உள்ளது  என்று பேசும் முதல்வர் இறை நம்பிக்கை உள்ளவர்கள் கொண்டாடும் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? தமிழக ஆளுநரின் விருந்துகளை புறக்கணிக்கும் தமிழக முதல்வர் ஜனாதிபதி அழைப்பை ஏற்று விருந்தில் கலந்து கொண்டது ஏன்? INDIA கூட்டணியில் உள்ள ஒரு கட்சிக்கூட G20 -க்கு செல்லாதபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் போனது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்