×

வருண்குமார் குறித்து அவதூறு கருத்து: எனக்கு தொடர்பில்லை- சீமான்

 

திருச்சி எஸ்பி வருண்குமார் மீதான அவதூறு கருத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார். சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார். ஐபிஎஸ் வருண்குமார் தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்களுக்கு எதிராக செயல்படுகிறார். தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்கள் மீது வருணுக்கு பிறப்பு வெறுப்பு. ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது.” எனக் கூறியிருந்தார். இதனால் நாம் தமிழர் கட்சியினர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திருச்சி எஸ்பி வருண்குமார் மீதான அவதூறு கருத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் எனது கட்சி பெண்களையும் தொடர்ந்து இழிவுப்படுத்திவருகின்றனர். வருண்குமார், அவரது ஆதரவாளர்கள்தான் அவதூறு செய்கின்றனர் என சொல்ல முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய சீமான், “கூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். செப்டம்பர் மாதம் தம்பி விஜய் கட்சி பணியை தொடங்குகிறார்” என்றார்.