×

திருமாவளவனை உயிரை கொடுத்தாவது முதலமைச்சராக்குவோம்- சீமான் 

 

நான் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தமிழர் என்றால் அதில் பிராமணர்களும் வந்துவிடுவார்கள் என்பதால் திராவிடரை கொண்டு வந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை வந்ததால்தான் கருணாநிதி அதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார். பிறப்பால் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியுமென்றால் அதுதான் மிகப்பெரிய சனாதனம். அப்படி பார்த்தால் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானதுதான் மிகப்பெரிய சனாதனம். திமுக- பாஜக இடையே கள்ள உறவு இல்லை, மிகவும் நல்ல உறவு உள்ளது.   பாஜகவுடன் குடும்பமே நடத்தி வருகிறது. சனாதனத்தை முதலில் உங்கள் வீட்டில் ஒழியுங்கள். துணை முதல்வராக வேறு ஒருவருக்கும் தகுதியில்லையா?


நான் ஆட்சிக்கு வந்தால் பாரதிதாசன் எழுதிய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கட்டும். அண்ணன் திருமாவளவனும், மருத்துவர் ராமதாசும்தான் எனது அரசியல் குருநாதர்கள். 2 முறையும் தோற்று போன எல்.முருகன் இணையமைச்சர் ஆக முடியும் என்றால், திருமாவளவன் முதலமைச்சராக முடியாதா? திருமாவளவன் முதல்வராகக் கூடாதா என்ற உணர்வு, உரிமை, உறவில் கூறுகிறேன். விசிக தலைவர் திருமாவளவமனை உயிரை கொடுத்தாவது முதலமைச்சராக்குவோம். திருமாவளவன் முதல்வராகக் கூடாது என்று எல்.முருகன் கூறியதை எதிர்க்கிறேன்” என்றார்.